LOADING...
இந்திய ராணுவத்தின் புதிய சமூக வலைதளக் கொள்கை: 'பதிவிடவோ, கருத்துக் கூறவோ தடை' 
புதிய கடுமையான வழிகாட்டுதல்களை ராணுவம் வெளியிட்டுள்ளது

இந்திய ராணுவத்தின் புதிய சமூக வலைதளக் கொள்கை: 'பதிவிடவோ, கருத்துக் கூறவோ தடை' 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 25, 2025
07:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது தொடர்பாக புதிய கடுமையான வழிகாட்டுதல்களை ராணுவம் வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ரகசியங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்

1. இன்ஸ்டாகிராம் (Instagram): ராணுவத்தினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தலாம், ஆனால் அது 'பார்க்க மற்றும் தகவல்களை அறிந்துகொள்ள' (Viewing and Monitoring only) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் அதில் எந்த ஒரு கருத்தையும் (Comment) பதிவிடவோ அல்லது தனது பார்வைகளை (Views) வெளிப்படுத்தவோ கூடாது. 2. வாட்ஸ்அப் & டெலிகிராம் (WhatsApp, Telegram, Signal, Skype): இந்த செயலிகள் மூலம் 'வகைப்படுத்தப்படாத' (Unclassified) பொதுவான தகவல்களைப் பகிர மட்டுமே அனுமதி உண்டு. தெரிந்த நபர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். யாருக்குத் தகவலை அனுப்புகிறோம் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அந்த வீரரையே சாரும்.

சமூக வலைத்தளங்கள்

மற்ற சமூகவலைத்தளங்களுக்கான அறிவுறுத்தல்

யூடியூப் & எக்ஸ் (YouTube, X, Quora): இத்தளங்களை 'செயலற்ற முறையில்' (Passive use) மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது அறிவு மற்றும் தகவல்களைப் பெறுவதற்கு மட்டுமே இதைப் பயன்படுத்தலாம். வீரர்கள் தாங்களாக உருவாக்கிய உள்ளடக்கங்கள் (User-generated content), செய்திகள் அல்லது பதிவுகளைப் பதிவேற்ற அனுமதி இல்லை. லிங்க்ட்இன் (LinkedIn): வேலை தேடுபவர்கள் அல்லது நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இதில் சுயவிவரக் குறிப்பை (Resume) பதிவேற்றலாம், ஆனால் ராணுவம் சார்ந்த ரகசிய விபரங்களைக் குறிப்பிடக் கூடாது.

Advertisement

காரணம்

ஏன் இந்த நடவடிக்கை?

சமூக வலைதளங்கள் வழியாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள், உளவுத் தகவல்கள் கசிவது மற்றும் ராணுவ வீரர்களை குறிவைக்கும் வெளிநாட்டு அமைப்புகளின் ஊடுருவல் ஆகியவற்றை தடுக்கவே இந்த புதிய கொள்கை (Policy) வகுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் சீருடை, ஆயுதங்கள் அல்லது ராணுவ முகாம்களின் புகைப்படங்களைப் பகிரக் கூடாது என்பது ஏற்கனவே உள்ள விதியாகும். தற்போது அதில் 'கருத்து பதிவிடுதல்' தொடர்பான கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement