
தமிழக பாஜக தலைவர் போட்டியில் இருந்து அண்ணாமலை விலகினார்
செய்தி முன்னோட்டம்
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவர் என செய்திகள் வெளியான நிலையான நிலையில், கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை எனத்தெரிவித்துள்ளார்.
"பாஜகவில், தலைவர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில்லை. நாம் அனைவரும் கூட்டாக ஒரு கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறோம். அந்தப் பதவிக்கான போட்டியில் நான் இல்லை," என்று கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்தக் கட்சிக்கு நான் எப்போதும் நல்வாழ்த்துக்கள்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | "பதவி இல்லைனா என்னை மறந்துடுவிங்களா?"
— Sun News (@sunnewstamil) April 4, 2025
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி #SunNews | #Annamalai | #BJP | #ADMK pic.twitter.com/7Oen9k1Qmu
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#அரசியல்Post | பாஜக மாநில தலைவர் மாற்றத்தை உறுதி செய்த அண்ணாமலை.#SunNews | #BJP | #TamilNadu | #Annamalai pic.twitter.com/PWk4iuCwBv
— Sun News (@sunnewstamil) April 4, 2025
பேட்டி
கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் போட்டியிலிருந்து தன்னை உறுதியாக விலக்கிக் கொண்டு, "அடுத்த மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. எந்த அரசியல் ஊகங்களுக்கும் நான் பதிலளிக்கப் போவதில்லை. நான் எந்தப் போட்டியிலும் இல்லை" என்று கூறினார்.
பாஜகவின் அதிமுக கூட்டணி குறித்து மிகவும் கடுமையாகக் குரல் கொடுத்து வந்த அண்ணாமலை, சமீபத்தில் பிராந்தியக் கட்சி குறித்த தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொண்டார் . இருப்பினும், அது குறித்த விவரங்கள் குறித்து அவர் வாய் திறக்காமல் இருந்தார்.
"நமது உள்துறை அமைச்சர் பேசினார். இந்த விஷயத்தில் அவரது எதிர்வினையை இறுதி வார்த்தையாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று அப்போது அவர் கூறியிருந்தார்.
போட்டி
ஏகமனதாக மாநில தலைவர் தேர்வு
"இங்கு தலைவருக்கு போட்டி ஏற்படுவதில்லை. பாஜகத்தில் தலைவருக்கு போட்டி எல்லாம் இல்லை. அனைவரும் சேர்ந்து ஒரே மனதுடன் தலைவரை தேர்வு செய்கிறோம். போட்டி எங்கு வந்தது? அதனால் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்கிறேன். மற்ற கட்சிகள் போல 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்து ஓட்டுப் போடுவது இல்லை. அனைவரும் சேர்ந்து ஏகமனதுடன் தலைவரை தேர்வு செய்கிறோம். அப்போ போட்டி எங்கு வந்தது?" என்றார் அண்ணாமலை.
தமிழக பாஜக கட்சி தலைவர் பதவிக்கு நைனார் நாகேந்திரன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டம்
"தமிழகத்தை விட்டு செல்லமாட்டேன்"
அதோடு, "என்னுடைய பணி எப்போதும் தொண்டனாகவே தொடரும். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும். தமிழகத்தில் நல்லாட்சி கொண்டு வருவதற்கான பணி தொடரும். ஒரு தொண்டனாக கட்சி சொல்லும் பணியை செய்கிறேன். இந்த மண்ணை விட்டு செல்ல மாட்டேன். டில்லி சென்றாலும் ஒரு நாள் இரவு தங்கி மறுநாள் தமிழகம் திரும்புவேன். இந்த மண்ணை விட்டுச் செல்ல முடியாது." என சூளுரைத்தார் அண்ணாமலை.
அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.