Page Loader
ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம் 
ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம்

ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம் 

எழுதியவர் Nivetha P
Jun 13, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார். இவரது இக்கருத்துக்கு அதிமுக கட்சியின் இருஅணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், "அண்ணாமலை மீது அவரது கட்சியினரே பல குற்றச்சாட்டுகளைக்கூறி வருகிறார்கள்". "ஊழல் குறித்து பேச அவருக்கு எந்த தகுதியுமில்லை". "திமுக கட்சியின் 'பீ'டீமாக செயல்பட்டு வரும் இவர், ரவுடிகள் மற்றும் பணமோசடி செய்தவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து செல்லூர் ராஜு, "அண்ணாமலை பேச்சு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம். ஜெயலலிதா குறித்து அவதூறு பேசினால், சும்மா விடமாட்டோம்" என்று கூறியுளளார்.

ஆவேசம் 

அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை என்பதை நிரூபிக்கிறார் - டிடிவி தினகரன் 

அவரையடுத்து ஓ.எஸ்.மணியன்,"ஜெயலலிதா குறித்து ஆண்டவனே இழிவாக பேசினாலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று ஆவேசமாக பேசியுள்ளார். பொள்ளாச்சி ஜெயராம்,"ஜெயலலிதாவை மதிப்போர் மட்டுமே இக்கட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார். இவர்களைத்தொடர்ந்து டிடிவி தினகரன், "தனது 30ஆண்டு அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா பல சாதனைகளை செய்துள்ளார். அதனை பொறுக்கமுடியாதவர்கள் காழ்புணர்ச்சியில் இவ்வாறு அவதூறு பேசுகிறார்கள்". "ஜெயலலிதா மீது 1996ல் மட்டும் 49 வழக்குக்குள் பதிவு செய்தனர்". "ஜெயலலிதா குறித்து அறியாத அண்ணாமலை இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டு தனது அரசியல் தெரியாது என்பதனை அவ்வப்போது நிரூபித்து வருகிறார்" என்று கூறியுள்ளார். மேலும் "அண்ணாமலையின் இந்த பேச்சு தொண்டர்கள் மத்தியில் கடும் கோவத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனது கடும் கண்டனத்தினை தெரிவித்து கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.