கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிட அரசியலின் காலம் முடிந்து விட்டது என்றும், ஆளும் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களை கவர்வதற்காக, கோவையில் 1,000 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் குற்றம் சாட்டினார். ஜூன் 4ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "வரலாற்று முடிவு" கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் பேசிய கோவை நகரின் பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று கூறினார். கரூரில் வாக்களித்தவுடன் நேரே கோவைக்கு விரைந்தார் அண்ணாமலை.
ஊத்துப்பட்டியில் வாக்களித்த அண்ணாமலை
#WATCH BJP Tamil Nadu chief K Annamalai cast his vote at Uthupatti polling booth in Karur village. In #Coimbatore, Annamalai has been pitted against DMK's Ganapathy P Rajkumar & #AIADMK's Singai Ramachandran.#LokSabhaElections2024 #Annamalai #TamilNadu #Elections2024 #ElectionDay pic.twitter.com/bYuWsVzx3B— E Global news (@eglobalnews23) April 19, 2024