ஆந்திரா சிறுமி கற்பழிப்பு-கொலை: பள்ளி மாணவர்கள் ஆபாச கிளிப்களில் பார்த்ததை செயல்படுத்த முயன்றதாக வாக்குமூலம்
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியாலில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளிச் சிறுவர்கள் மூவரும், தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதையே தாங்களும் முயன்றனர் என வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இறந்த சிறுமியின் உடலை, பின்விளைவுகள் ஏற்படும் என்று பயந்து சிறுவர்களின் உறவினர்கள் ஆற்றில் வீசினர் என கண்டறியப்பட்டுள்ளது. கோவில் ஒன்றில் இந்த பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது. மைனர் சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
உறவினர்கள் இறந்த சிறுமியின் உடலை தூர வீசியுள்ளனர்
குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களின் தந்தையும், மாமாவும் தங்கள் குழந்தைகள் வழக்குகளை எதிர்கொள்வார்கள் என்று பயந்து, சிறுமியின் உடலை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாறையில் கட்டி, கிருஷ்ணா நதியில் வீசியதாக நந்தியால் எஸ்பி ஆதிராஜ் சிங் ராணா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களில், 12 வயதுடைய இருவர் 6ஆம் வகுப்பிலும், மூன்றாவது சிறுவன் 13 வயதுடையவர்- 7ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், 3 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஜூலை 10 அன்று கைது செய்யப்பட்டதாக ராணா கூறினார். மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை கவர்ந்திழுத்து, பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றனர்.