Page Loader
இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம்
இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் என கூறப்படும் எடிட்டிங் புகைப்படம்

இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம்

எழுதியவர் Nivetha P
Feb 15, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பதாக கடந்த பிப்.,13ம் தேதி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டார். இதற்கு இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், 'தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன்' என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் இணையத்தில் பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று கூறி வயதான தோற்றம்கொண்ட புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் வாசி பதிவு

பிரபாகரனின் பழைய படத்தினை பேஸ் செயலி மூலம் எடிட் செய்துள்ளதாக தகவல்

இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்தை ட்விட்டர் பயனாளி ஒருவர் ரிவெர்ஸ் இமேஜ் சேர்ச் செய்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிப்ரவரி 13ம்தேதி 2023 அன்று இயக்குனர் வெங்கடேஷ் குமார் என்னும் ட்விட்டர்பக்கத்தில் PrabhakaranJoy என்னும் தலைப்புடன் வைரல் படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் சுயவிவரத்தை காண்கையில் அந்த வயதான தோற்றத்தில் இருக்கும் பிரபாகரனின் வண்ணப்படம் 2020ல் ட்விட்டர்வாசி ஒருவரால் பதிவிட்டப்பட்டுள்ளது. அதனை ரெவர்ஸ் இமேஜ்சேர்ச் செய்ததில் இதன் உண்மையான புகைப்படம் 2020ம்ஆண்டு Ganaeramesh எனும் ட்விட்டர்பக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரபாகரனின் பழைய படத்தினை பேஸ் செயலி மூலம் எடிட் செய்துள்ளார் என்றும் அந்த ட்விட்டர் வாசி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ உண்மைத்தன்மை என்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.