NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 
    'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

    'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Nov 11, 2023
    07:37 pm

    செய்தி முன்னோட்டம்

    'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது விளக்கத்தினை அளித்துள்ளார்.

    அதிமுக ஆட்சி நிறைவுற நேரத்தில் துவக்கப்பட்டது தான் இந்த 'அம்மா மினி கிளினிக் திட்டம்'.

    இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், செவிலியர், ஒரு சுகாதாரப்பணியாளர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

    இது போன்ற கிளினிக் தமிழ்நாடு முழுவதும் 2000 இடங்களில் துவங்கப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    இதனிடையே நடந்த தேர்தலில் திமுக ஆட்சியினை பிடித்தது.

    அதன்பின்னர் 'மக்களை தேடி மருத்துவம்' என்னும் திட்டத்தினை தற்போதைய அரசு கொண்டு வந்துள்ளது.

    அம்மா கிளினிக் திட்டத்தினை நிறுத்தவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

    விளக்கம்

    'இது தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட திட்டம்' - அமைச்சர் 

    இந்நிலையில் இதற்கான விளக்கத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தினை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பயன்பெற்றோரின் தரவுகள் உள்ளது" என்று கூறியுள்ளார்.

    மேலும், "அம்மா மினி கிளினிக் திட்டம் மூலம் பயன்பெற்றோரின் தரவுகளை தர முடியுமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, "அம்மா கிளினிக் திட்டம் மூலம் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. அது தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட திட்டம், தற்போது அது முடிந்துவிட்டது" என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை
    அதிமுக
    திமுக

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    தமிழ்நாடு

    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி
    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மு.க ஸ்டாலின்
    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    சென்னை

    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை இந்தியா
    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு தமிழ்நாடு
    சரிந்தது தங்கத்தின் விலை- இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 1 தங்கம் வெள்ளி விலை
    யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் யூடியூபர்

    அதிமுக

    மதுரையில் நடக்கவுள்ள அதிமுக மாநாடு - நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை  மதுரை
    அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு  நாடாளுமன்றம்
    தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு
    சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்  விருதுநகர்

    திமுக

    உடல்நலக்குறைவு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி தமிழக அரசு
    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது  தமிழ்நாடு
    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள்  தமிழக அரசு
    இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட் உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025