மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதிவியேற்றார் அஜித் பவார்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(NCP) சேர்ந்த அஜித் பவார் உட்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக தலைமையிலான மாநில அரசுடன் இணைந்தனர்.
பாஜக ஆட்சியில் உள்ள மகாராஷ்டிராவில் நடைபெறும் மிகப்பெரும் அரசியல் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் முக்கிய எதிர்கட்சி தலைவரான அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்ததை அடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர், இந்த பதவியை பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடந்த பதியேற்பு விழாவில் அஜித் பவாருடன் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உட்பட மொத்தம் 9 NCP தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
நிசக்ஜச
இன்று காலை அஜித் பவார் NCP எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார்
மகாராஷ்டிர சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அஜித் பவார் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த மிகப்பெரும் அரசியல் மாற்றம் அம்மாநிலத்தில் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 53 NCP எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 30 பேர் அஜித் பவாருக்கு ஆதரவளிக்கின்றனர்.
ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளில் இருந்து தப்பிக்க அவருக்கு 36க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
இதனையடுத்து, மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அஜித் பவார் சில கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து மிக முக்கிய NCP தலைவரான சரத் பவாருக்கு தெரிவிக்கப்படவில்லை.
இந்த சந்திப்பை அடுத்து, அஜித் பவார் ஆளும் பாஜகவுடன் இணைந்தார்.