Page Loader
ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை
ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை

ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை

எழுதியவர் Nivetha P
Jan 05, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது. இந்த விமானத்தில் முதல் வகுப்பில் உணவிற்கு பிறகு பயணிகள் தூங்க ஏதுவாக விளக்குகள் அணைக்கப்பட்டப்பொழுது போதையில் இருந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து அப்பெண் விமான ஊழியர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதினார்.

ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை

சிறுநீர் கழித்த போதை நபர் 30 நாட்களுக்கு விமானங்களில் பயணம் செய்ய தடை

அந்த கடிதத்தில் அப்பெண் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து எடுத்துரைத்திருந்தார். இந்த கடிதம் அனுப்பிய பிறகே, சம்பத்தப்பட்ட நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் ஏர் இந்தியா சார்பில் அந்த நபர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த புகாரின் பேரில், அந்த நபரை பிடிக்க போலீசார் பல குழுக்களை அமைத்து தேடி வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் மத்திய போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.