Page Loader
நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி 
அவசரகால உபகரணங்களுடன் விமானத்திற்குள் சுதந்திரமாக சுற்றி கொண்டிருந்த பயணியால் பரபரப்பு

நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி 

எழுதியவர் Sindhuja SM
Jul 16, 2023
12:42 pm

செய்தி முன்னோட்டம்

ஜூலை 9ஆம் தேதி சிட்னியில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தில் ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரியை ஒரு பயணி தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிஸ்னஸ் வகுப்பில் பயணம் செய்த அந்த பயணியின் இருக்கையில் ஏற்பட்ட கோளாறால் அவரது இருக்கை பொருளாதார வகுப்பிற்கு மாற்றப்பட்டதாகவும், அதனால் கோபமடைந்த பயணி ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. "பயணியிடம் மென்மையாக பேசுமாறு அதிகாரி கேட்டுக் கொண்டார். ஆனால், அந்த பயணி அதிகாரியை கன்னத்தில் அறைந்து, அவரது தலையை முறுக்கி, அவரிடம் தவறாக நடந்துகொண்டார்," என்று அந்த பயணி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிங்

"அவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்": ஏர் இந்தியா 

ஐந்து விமான பணியாளர்களாலும் அந்த பயணியை கட்டுப்படுத்த முடியாததால், அவர் அவசரகால உபகரணங்களுடன் விமானத்திற்குள் சுதந்திரமாக சுற்றி கொண்டிருந்தார் என்று ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "ஜூலை 9, 2023 அன்று சிட்னி-டெல்லிக்கு இடையே இயக்கப்படும் AI-301 விமானத்தில் ஒரு பயணி, பயணத்தின் போது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடந்து கொண்டார். வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், அவர் விமான பணியாளர்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவது போல் நடந்து கொண்டார்" என்று ஏர் இந்தியா நிறுவனம் இது குறித்து ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், "விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியதும், பயணி பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அதற்கு பின், அவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டார்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.