NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
    சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்த அவர், சக்கர நாற்காலி உதவி கோரியிருந்தார்.

    ஆனால் விமான நிலையத்தில் இருந்த டிமாண்ட் காரணமாக சக்கர நாற்காலி அவருக்கு கிடைக்கவில்லை.

    அதனால், சக்கர நாற்காலிக்காக காத்திருக்காமல் விமானத்தில் இருந்து இறங்கி டெர்மினலுக்கு நடந்து சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது 

    இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணியின் மனைவிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் மற்றொரு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யும் வரை காத்திருக்குமாறு கூறியதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆனால் அதற்கு காத்திராமல், அவர் தனது மனைவியுடன் இமிகிரேஷன் நோக்கி நடக்க முடிவெடுத்து சென்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்ததாகவும், உடனே விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவருக்கு விரைந்து சிகிச்சை அளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முதலுதவி செய்யப்பட்டு, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும், ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான நிலையம்
    ஏர் இந்தியா

    சமீபத்திய

    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025