LOADING...
முன்னாள் முதல்வர் OPS புதிய கட்சியை தொடங்கினார்; டிச.15-ல் முக்கிய ஆலோசனை கூட்டம்
முன்னாள் முதல்வர் OPS புதிய கட்சியை தொடங்கினார்

முன்னாள் முதல்வர் OPS புதிய கட்சியை தொடங்கினார்; டிச.15-ல் முக்கிய ஆலோசனை கூட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 25, 2025
01:13 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), தான் தலைமையேற்று நடத்தி வந்த அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி மூன்று ஆண்டுகளாக அவர் வழிநடத்தி வந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை (ADMKTUMK), தற்போது ஒரு அரசியல் கட்சியாக அறிவித்துள்ளார். உதயமான இந்த புதிய கட்சியின் பெயர், அவரது குழுவின் பெயரை அடிப்படையாக கொண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என சூட்டியுள்ளார்.

தீர்மானங்கள்

முக்கியத் தீர்மானங்கள்

இது சார்ந்து சம்பீபத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் சென்னையில் நடைபெற்ற ADMKTUMK-ன் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ADMKTUMK அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றுவது என்றும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தை ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்குவது என்றும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

எதிர்கால திட்டம்

OPS கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள்

புதிய கட்சியின் சார்பில் டிசம்பர் 15 அன்று நடைபெறவுள்ள கூட்டம் "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை" எடுக்கும் என்று OPS தெரிவித்துள்ளார். அவர் மறைமுகமாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை (EPS) தாக்கிப் பேசியுள்ளார். தொடர்ந்து 11 தேர்தல்களில் கட்சி தோல்வியடையக் காரணமாக இருந்த ஈ.பி.எஸ்., தங்களை "கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்ட வேண்டாம்" என்றும் அவர் எச்சரித்தார். அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பாஜக, 2026 தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வை ஒன்றுபட வலியுறுத்தி வரும் நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.