
சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் 9-வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்தும், சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டும், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய ஆளும் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
இதன் காரணமாக முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் காலை 6 மணி-மாலை 6 மணி வரை நடைபெறும்.
கடையடைப்பு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அசம்பாவிதம் ஏதும் நடைபெறக்கூடாது என்பதால் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
புதுச்சேரியில் இன்று முழு கடையெடுப்பு
#JUSTIN | சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி, காரைக்காலில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு
— Sun News (@sunnewstamil) March 8, 2024
புதுச்சேரி, காரைக்காலில் கடைகள் திறக்கப்படவில்லை. அண்ணா சிலை அருகே அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்#SunNews | #Puducherry pic.twitter.com/BVECJcAhi5