
மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை
செய்தி முன்னோட்டம்
கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரை என்றால் அது புதுச்சேரி கடற்கரை தான்.
1.2 கி.மீ., நீளம் கொண்ட இந்த கடற்கரையினை 'ராக் பீச்' என்று சுற்றுலா பயணிகள் இதனை அழைப்பதுண்டு.
நாள்தோறும் இந்த கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஏராளமான உள்ளூர் மக்களும் இங்கு வந்து கடலின் அழகை ரசித்து செல்வது வழக்கம்.
கடந்த 17ம் தேதி புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு குருசுகுப்பம் என்னும் பகுதி வரை கடல் நீரின் நிறத்தில் மாற்றம் காணப்பட்டது.
இதனையடுத்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்டவை கடல் நீரின் அளவை எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
கடல்
நச்சுத்தன்மை அடங்கிய நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமுள்ள காரணத்தினால் நிற மாற்றம்
இதில், நச்சுத்தன்மை அடங்கிய நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமுள்ளதால் கடல் மாசு ஏற்பட்டு கடல்நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்டவை கடல்நீரின் அளவை எடுத்து ஆய்வுச்செய்துள்ளனர்.
இதில், நச்சுத்தன்மை அடங்கிய நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமுள்ளதால் கடல்நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று(நவ.,1)மீண்டும் அதேப்பகுதியினை சேர்ந்த கடல்நீர் செம்மண் நிறமாக மாறியுள்ளது.
கடந்த 2 வாரத்தில் 3வது முறையாக இவ்வாறு புதுச்சேரி கடற்பகுதியின் ஓர் பகுதி மீண்டும் நிறம் மாறியுள்ளது.
இதனை கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆச்சர்யமடைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
புதுச்சேரி கடற்பகுதி
#WATCH | புதுச்சேரியில் 3வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்!
— Sun News (@sunnewstamil) November 1, 2023
கடலின் நிறம் மாற்றம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.#SunNews | #Pondicherry pic.twitter.com/beWdUttvIW