Page Loader
350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்
போரில் மாமன்னர் சத்ரபதி சிவாஜி பயன்படுத்தியதாக சொல்லப்படும் 'புலி நகங்கள்'

350 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வர இருக்கும் சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்

எழுதியவர் Srinath r
Oct 01, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

மாமனார் சத்ரபதி சிவாஜியின் பழம்பெறும் புலி நகங்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியா கொண்டுவரப்படுகிறது. தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கும் புலி நகங்களை இந்தியா கொண்டுவர மகாராஷ்டிரா கலாச்சாரத்துறை அமைச்சர் லண்டன் செல்கிறார். மகாராஷ்டிரா கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கண்டிவார் வரும் செவ்வாய்க்கிழமை லண்டனில் புலி நகங்களை இந்தியா கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். கடந்த 1659 ஆம் ஆண்டு நடந்த போரில் பீஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல்கானை மன்னர் சிவாஜி இந்த புலி நகங்களால் வெற்றி கண்டவர் எனக் கூறப்படுகிறது. இந்தப் போரின் வெற்றி சத்ரபதி சிவாஜியின் மராத்திய அரசாங்கத்தை அமைக்கும் பிரச்சாரத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

2nd card

மாமனாரின் 350வது முடிசூட்டு விழா ஆண்டு விழாவிற்கு இந்தியா வரும் புலி நகங்கள்

இது குறித்து பேசிய மகாராஷ்டிரா கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர், "மாமன்னரின் புலி நகங்கள் எங்களுக்கு ஆற்றலையும் உத்வேகத்தையும் தரக்கூடியது. இந்த ஆண்டு சத்ரபதி சிவாஜியின் 350வது முடிசூட்டு விழா ஆண்டு விழாவை கொண்டாட இருக்கும் நேரத்தில் புலி நகங்கள் திரும்ப கிடைப்பது மகிழ்ச்சி" எனக் கூறினார். இருந்த போதும் இந்த புலி நகங்களின் உண்மை தன்மையை வரலாற்றாளர்கள் கேள்விக்குறியாக்குகிறார்கள். சில வரலாற்று ஆய்வாளர்கள், விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் தரவுகளின் படி சத்ரபதி சிவாஜி இந்த நகங்களை பயன்படுத்தவில்லை என வாதிடுகின்றனர். சிவசேனா(உத்தவ் தாக்கரே) கட்சியை சேர்ந்த ஆதித்ய தாக்கரேவும் இதன் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளார்.