Page Loader
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

எழுதியவர் Nivetha P
May 29, 2023
01:38 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று(மே.,29)அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் தற்போதைய ஆளுங்கட்சியினை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடக்கிறது. மதுரை, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற பல்வேறு இடங்களில் ஆர்பாட்டமானது நடந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், செல்லூர்ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள். அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் இல்லாத இடத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் முன்னே ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post