
அதிமுக வழக்கு: 4வது நாள் விசாரணையின் சுருக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின், இதே பிரச்சனையை ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையின் 4வது நாளான இன்று ஈபிஎஸ் தரப்பு தன் வாதத்தை முன் வைத்திருக்கிறது.
பதவிகள்
ஈபிஎஸ் தரப்பு வாதத்தின் சுருக்கம்
தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர் தரப்பு கூறுகிறது. ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. எனவே தான் பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-ஐ ஒருங்கிணைப்பாளராக இதே பொதுக்குழு தான் தேர்ந்தெடுத்தது. ஆனால், அப்போது தொண்டர்களிடம் போக வேண்டும் என்று ஓபிஎஸ் கூறவில்லை. அதே நடைமுறை தான் இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழுவின் நன்மைக்காகவே கொண்டுவரப்பட்டது. பொதுக்குழுவிற்கு அதை உருவாக்க உரிமை இருக்கிறது என்றால், அதை ரத்து செய்வதற்கும் உரிமை இருக்கிறது.
கடந்த ஜூலை மாதம், 2460 உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஈபிஎஸ்-ஐ இடைக்கால பொது செயலாளராக்கி இருக்கின்றனர்.
இதில் 94.5 சதவீத உறுப்பினர்கள் ஈபிஎஸ்ஸிற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர்.
இதனையடுத்து, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.