LOADING...
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு

எழுதியவர் Nivetha P
Mar 28, 2023
02:53 pm

செய்தி முன்னோட்டம்

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பினை இன்று(மார்ச்.,28)சென்னை உயர்நீதிமன்றம் அளித்தது. அதன்படி, கடந்த ஜூலை 11ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுசெயலாளருக்கான தேர்தலுக்கு தடைக்கோரிய ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்ததோடு அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நாளை(மார்ச்.,29)நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு