
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராகவுள்ளவர் திண்டுக்கல் சீனிவாசன்.
75 வயதாகும் இவர் தற்போது திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியினை வகித்து வருகிறார்.
அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறிய இவருக்கு, ஓ.பன்னீர் செல்வம் அதிமுக'வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் வகித்த பொருளாளர் பதவியினை எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இவர் நேற்று(ஆகஸ்ட்.,8) சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடலிலுள்ள கட்டியினை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
தற்போது அதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
மருத்துவமனையில் அனுமதி
#JUSTIN || அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
— Thanthi TV (@ThanthiTV) August 8, 2023
உடலில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதி என தகவல்
சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி #chennai | #dindigulSrinivasan pic.twitter.com/KN7p7a0bbG