LOADING...
அதிமுக - பாஜக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது: யாருக்கு எத்தனை தொகுதிகள்?
அதிமுக - பாஜக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது

அதிமுக - பாஜக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது: யாருக்கு எத்தனை தொகுதிகள்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2026
03:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து, இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இழுபறிக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பாஜக மாநிலத் தலைமை முன்னிலையில் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

விவரம்

தொகுதிப் பங்கீடு விவரம்

பேச்சுவார்த்தையின்படி கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிமுக, பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளைப் பெற்றுள்ள பாஜக, தனது செல்வாக்குள்ள பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. அதிமுகவிற்கு 178, பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளான பாமகவிற்கு 18 இடங்களும், அமமுகவிற்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதி பங்கீடு இறுதி பேச்சுவார்த்தையின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தலைவர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், AMMK பொதுச்செயலாளர் TTV தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்துத்திட்டனர்.

Advertisement