சென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்
செய்தி முன்னோட்டம்
உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் சீனா நாட்டிற்கு வெளியே ஆசியாவிலேயே இந்தியாவின் தமிழ்நாடு மாநிலமான சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தினை அமைக்க அடிடாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் வர்த்தகத்தினை மேம்படுத்த இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
ஆடை உற்பத்தி, காலணிகள் உற்பத்தி உள்ளிட்டவைகளை மேற்கொள்ள தேவையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த மையம் அமைக்கப்படும் பட்சத்தில் இனி உலகம் முழுவதும் அடிடாஸ் காலணிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.
நிறுவனம்
தமிழகத்தில் தடம் பதிக்கும் அடிடாஸ் நிறுவனம்
சீனாவிற்கு பிறகு தமிழகத்தில் தடம் பதிக்கும் இந்நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் தொழில் துவங்குவதற்கான முதலீடுகளை ஈர்க்க ஏராளமான வெளிநாட்டு தொழிலதிபர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கவுள்ள நிலையில், இதற்கான அரங்குகள் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஆயத்தப்பணிகள் அனைத்தும் தமிழக தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.