
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்
செய்தி முன்னோட்டம்
சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அவர்கள் அண்மையில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், 2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்க ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி இந்த திட்டத்தின் மூலம், உறைவிப்பான், குளிர்விப்பான் என்னும் உபகரணங்களை கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்ட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதுடையவராக இருக்கவேண்டும்.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர் www.tahdco.com என்னும் இணையத்தள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @DinakaranNews pic.twitter.com/Z2QnluSNPX
— TN DIPR (@TNDIPRNEWS) May 11, 2023