நேரலை: சாகச நிகழ்ச்சியைத் தொடர்ந்து தாம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு
ஆண்டுதோறும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும். மேலும், அக்டோபர் 8 அன்று வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை சென்னை மெரினாவில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளாக பங்கேற்ற நிலையில், அதிக பொதுமக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சியாக இது லிம்கா சாதனை புத்தகத்திலும், இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) தாம்பரத்தில் விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு நடைபெறுகிறது.