Page Loader
சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன
ஆந்திராவில் தீ விபத்தால் 90 எலக்ட்ரிக் வாகனங்கள் கருகியுள்ளன

சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன

எழுதியவர் Siranjeevi
Apr 19, 2023
03:06 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திராவில் 90 எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிந்தது நாசமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகலுமா மாவட்டத்தில் அமைந்துள்ள ஷோரூமில் 90 எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்யும் போது எதிர்பாராத விதமாக மின்சார வாகனங்கள் தீப்பற்றியுள்ளது. உடனே பரவிய தீ 90 வாகனங்களும் எரிந்துள்ளன. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. மேலும், இந்த அசாம்பாவிதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post