Page Loader
ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை
ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

எழுதியவர் Nivetha P
Sep 01, 2023
05:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு, வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியினை அடுத்த பெரிய பாலப்பக்கம் என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. இவரது மனைவி கீதா, இவர்களுக்கு தாமு என்னும் 14 வயது மகன் ஒருவர் இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வசந்தகுமார் தற்போது உயிரோடு இல்லாத நிலையில், தாயும் மகனும் மட்டும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தாமு எந்நேரமும் மொபைல் போனில் ப்ரீ-ஃபயர் விளையாட்டினை விளையாடி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் கோபமுற்ற அவரது தயார் கீதா, தொடர்ந்து தனது மகன் தாமுவை கேம் விளையாட கூடாது என்று எச்சரித்துள்ளார் என்று தெரிகிறது.

தற்கொலை 

பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவன் 

இதனிடையே நேற்று(ஆகஸ்ட்.,31)மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்த தாமுவை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் கோபம் கொண்ட தாமு தங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கீழே வராததால் மாடிக்கு சென்று பார்த்த அந்த தாயாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தாமு பிளேட் கொண்டு தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு கீதா கதறி அழுத நிலையில், தகவலறிந்து அங்குவந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே உயிரிழந்த மாணவன் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. நன்றாக படிக்கக்கூடிய மாணவனின் இந்த திடீர் தற்கொலை குறித்து தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.