NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிகமான விமான பணியாளர்கள் 'சிக் லீவ்' எடுத்ததால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகமான விமான பணியாளர்கள் 'சிக் லீவ்' எடுத்ததால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து 

    அதிகமான விமான பணியாளர்கள் 'சிக் லீவ்' எடுத்ததால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து 

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2024
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    அதிகமான கேபின் குழு உறுப்பினர்கள் 'சிக் லீவ்' எடுத்ததை அடுத்து இன்று 86க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏறக்குறைய 300 மூத்த கேபின் குழு உறுப்பினர்கள் கடைசி நிமிடத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறியதாகவும், தங்கள் மொபைல் ஃபோன்களை அவர்கள் அணைத்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

    இதனால் 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு விதிமுறைகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய பணியாளர்கள் இந்த நூதன போராட்டத்தை செய்வதாக நம்பப்படுகிறது.

    இந்தியா 

    பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நிவாரணம் 

    எக்ஸ்பிரஸ் நிர்வாகம், புதிய வேலைவாய்ப்பு விதிமுறைகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய எதிர்ப்புக் குழுவினருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது.

    இந்த நெருக்கடிக்கு மத்தியில், "எங்கள் கேபின் குழுவில் ஒரு பகுதியினர் கடைசி நிமிடத்தில் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் நேற்றிரவு தொடங்கி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன." என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பத் தர ஒப்புக்கொண்டது.அப்படி இல்லையென்றால், பயணிகள் தங்கள் பயணத்தை மற்றொரு தேதிக்கு எந்த கட்டணமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    விமான சேவைகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி இந்தியா
    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு கேரளா

    விமான சேவைகள்

    திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம் திருச்சி
    முதல் காலாண்டில் லாபத்தைப் பதிவு செய்த இன்டிகோ, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் CEO இந்தியா
    மதுரை-கோவா விமான சேவை துவங்கியது மதுரை
    விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்  விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025