NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது
    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது
    இந்தியா

    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    September 01, 2023 | 09:39 am 0 நிமிட வாசிப்பு
    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது
    அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது

    ஜம்மு காஷ்மீரில், பிரிவினைவாதத்தை தூண்டும் தீவிரவாதிகள் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். பொதுமக்கள் இடையே மறைந்து வாழும் இவர்களை பிடிக்க, மாநில போலீசாரோடு, மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று, தோடா மாவட்டத்தில். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் ஒரு சிலர் தப்பிவிட்டதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 8 பயங்கரவாதிகளும், அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் என்ற ஜாவித், முஜாகித் உசைன் என்ற நிசார் அகமது, தாரிக் உசைன், இஷ்தியாக் அகமது, அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

    அரசு வேலையில் தீவிரவாதி 

    இவர்களில் அடில் பரூக் பரிடி என்பவன், ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணியாற்றியவன் எனவும், இஷ்பாக் அகமது என்பவன், தோடா கோர்ட்டு வளாகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருபவன் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, தப்பியோடிய பயங்கரவாதிகளுள் சிலரும் அரசு பணிகள் மற்றும் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் சாமானியர்கள் போர்வையில், இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஜம்மு காஷ்மீர்
    கைது

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு தேர்தல்
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்  தீவிரவாதிகள்

    கைது

    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்
    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி
    மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023