Page Loader
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jun 15, 2024
12:52 pm

செய்தி முன்னோட்டம்

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தார் என்றும், மேலும் இருவர் காயமடைந்தனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். பல்வேறு உள்ளூர் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரிவுகளின் கூட்டுப் படைகளை உள்ளடக்கிய நீண்ட துப்பாக்கிச் சண்டை நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று நடந்தது. இந்த நடவடிக்கையானது நாராயண்பூர்-கொண்டகான்-காங்கர்-தந்தேவாடா மாவட்ட ரிசர்வ் காவலர் படை(டிஆர்ஜி), சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின்(ஐடிபிபி) 53வது பட்டாலியனின் படைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சியாகும்.

இந்தியா 

கூட்டு பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தப் படைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தன. நாராயண்பூர் மாவட்டத்தில் நீடித்த துப்பாக்கிச் சண்டையுடன், இரண்டு நாட்களாக தொடர்ந்து என்கவுன்டர் நடவடிக்கை நடந்து வந்தது, நாராயண்பூர், பிஜாப்பூர் மாவட்டம் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் பரவியுள்ள அபுஜ்மர் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வனப்பகுதியாகும். 4000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இது, அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக பெரும்பாலும் மக்களால் அணுக முடியாததாக உள்ளது. இதனால் சமீப காலமாக மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுக்கு கோட்டையாக இந்த பகுதி மாறியுள்ளது. இது தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் அதன் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை கொரில்லா இராணுவம்(PLGA) ஆகியவற்றின் மையமாகவும் உள்ளது.