வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல்
நாடு முழுவதும், கீழ் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் விரைவில் எண்ணிக்கையில் 5 கோடியை எட்டிவிடும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதனைதொடர்ந்து தற்போது 'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' இதுகுறித்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வழக்கறிஞர்களின் மரணம், வழக்கு இழுபறியாகும் பட்சத்தில் வழக்கறிஞர்களுக்கு போதுமான கண்டனம் வழங்காமல் இருப்பது போன்ற காரணங்களால் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவதாக NJDP கூறுகிறது. மேலும், இலவச சட்டசேவைகள் திறமையின்மை போன்ற பல்வேறு காரணங்களாலும் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளது. மேற்குறிப்பிட்டபடி, தேக்கமடைந்துள்ள 63 லட்சம் வழக்குகளில் 77.7 சதவிகித வழக்குகள் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுடையதாகும்.
அரசின் சட்ட சேவைகள் குறித்து அறிவித்த மத்திய அரசு - 1.03 கோடி பேர் பயனடைவு
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தாமதம் வழக்குகள் தேக்கமடைய முக்கிய காரணம் என்றும் NJDP அமைப்பு கூறியுள்ளது. எவ்வாறு வழக்கறிஞர்கள் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதோ அதே போல் நீதிபதிகள் பற்றாக்குறையும் இதற்கு காரணம் என்று சட்டவிழிப்புணர்வு அமைப்பான 'நியாயா' தலைவர் அனிஷாகோபி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரு வழக்கு முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில், அவ்வளவு காலம் வழக்கறிஞர்களுக்கு சாமானியர்களால் கட்டணத்தை செலுத்த முடியாமல் போகிறது. இந்நிலையில், அரசின் சட்டசேவைகள் குறித்து சிலதகவல்களை மத்திய அரசு வெளியிட்டதையடுத்து, கடந்த 5ஆண்டுகளில் 1.03கோடி பேர் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றங்களின் வழக்கு நிலுவைகுறித்து 'கொலீஜியம்' அமைப்பை மத்திய அரசு அண்மையில் விமர்சனம் செய்திருந்தநிலையில் தற்போது NJDG வெளியிட்டுள்ள அறிக்கைகள் அதிக கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.