Page Loader
ஊட்டியில் கட்டுமான பணி இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு 
காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஊட்டியில் கட்டுமான பணி இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Feb 07, 2024
05:47 pm

செய்தி முன்னோட்டம்

ஊட்டியில் கட்டுமானப் பணியின் போது, திடீரென சுவர் இடிந்து விழுந்ததில், கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி அருகே உள்ள காந்தி நகர் பகுதியில், தனி நபருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நடைபெறும் வேளையில், வீட்டின் மேல் புறத்தில் இருந்த கழிப்பிடம் வலுவிழந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் கீழ் புறத்தில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் தான் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது

ட்விட்டர் அஞ்சல்

ஊட்டியில் விபத்து