
திருப்பதி மலைப்பாதையில் சிக்கிய மற்றொரு சிறுத்தை - வைரல் வீடியோ
செய்தி முன்னோட்டம்
திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் கூட்டத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுவன் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதனையடுத்து வனத்துறையினர், சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க ஆங்காங்கே கூண்டுகளை வைத்தனர்.
அவ்வாறு வைக்கப்பட்ட கூண்டுகளில் 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் சிறுத்தைகள் இருக்காது என்று எண்ணிய நிலையில் 5வதாக ஓர் சிறுத்தையின் நடமாட்டம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி அதிர்ச்சியளித்தது.
இந்த சிறுத்தை, முன்னதாக கூண்டுகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து செல்வது கேமராவில் பதிவாகியது.
இந்நிலையில், நரசிம்ம கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் சுற்றித்திரிந்த 5வது சிறுத்தையும் நேற்று இரவு(செப்.,8) பிடிபட்டுள்ளது.
அதற்கான சிசிடிவி வீடியோவினை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்
ட்விட்டர் அஞ்சல்
வீடியோ வெளியீடு
తిరుమలలో చిక్కిన చిరుత
— Ayaana 25 (@mastan252426) September 7, 2023
ట్రాపింగ్ విజువల్స్...!! #tirupathi #Tiger pic.twitter.com/JKDfTuG5YI