NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை 
    தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை 
    இந்தியா

    தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை 

    எழுதியவர் Nivetha P
    April 30, 2023 | 11:00 am 1 நிமிட வாசிப்பு
    தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை 
    தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை

    தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அண்மையில் சில பக்கங்களை கொண்ட பட்டியலினை 'திமுக ஃபைல்ஸ்' என்னும் பெயரில் வெளியிட்டார். இந்த பட்டியல் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலினை கிளப்பியது. அதன்படி அந்த 'திமுக ஃபைல்ஸ்'ல் உள்ள முக்கிய 5 உண்மைத்தன்மையினை இந்த செய்தி குறிப்பில் காண்போம். சென்னையில் ஏப்ரல் 14ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த பொழுது நடந்த சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தினை பெற ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக ரூ.200 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டினை திமுக மற்றும் மெட்ரோ நிறுவனம் மறுத்துள்ளது.

    அடையாளம் தெரியாத நபர் முதல்வர் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றசாட்டு 

    அதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஒரேயாண்டில் ரூ.30,000கோடி சொத்து சேர்த்ததாக நிதியமைச்சர் யாரோஒருவரோடு பேசும் ஆடியோ கடந்த 20ம்தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு 2நாட்களுக்கு பிறகு மறுப்பு தெரிவித்த நிதியமைச்சர் இது தன் குரலில்லை, புனையப்பட்டஆடியோ என்றும், திமுக தொண்டர்கள் இடையேயும், தனக்கும் முதல்வருக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தவே இவ்வாறு செய்வதாக கூறினார். தொடர்ந்து மீண்டும் செவ்வாய்க்கிழமையன்று பழனிவேல்தியாகராஜன் பேசிய 2ம்வீடியோவினை அண்ணாமலை வெளியிட்டார். அதில் அடையாளம் தெரியாத நபர் முதல்வர் குடும்பத்தினர்மீது ஊழல் குற்றசாட்டினை முன்வைக்கிறார். முதல்வரின் மகனும்,மருமகனும் கொள்ளையடித்த பெரும்பகுதியினை எடுத்துச்செல்வதாக சபாநாயகர் கூறுவதை கேட்கமுடிகிறது. அதேபோல் பாஜக ஆட்சியினை பாராட்டியும், 'சிஸ்டம் சரியில்லை'என திமுகவை கேலி செய்வதையும் நம்மால் கேட்கமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    பாஜக
    திமுக
    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்  ஆந்திரா
    தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு  பள்ளி மாணவர்கள்
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  இந்தியா

    பாஜக

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - முக்கிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்  சென்னை
    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ்  இந்தியா
    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு  சென்னை
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்

    திமுக

    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  தமிழ்நாடு
    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு
    அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை  பாஜக அண்ணாமலை

    மு.க ஸ்டாலின்

    ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  சென்னை
    பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!  ஸ்டாலின்
    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023