LOADING...
டெல்லியில் 5 நீதிமன்ற வளாகங்கள், 2 CRPF பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐந்து நீதிமன்ற வளாகங்களுக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் 5 நீதிமன்ற வளாகங்கள், 2 CRPF பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2025
01:13 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரில் உள்ள ஐந்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 18) வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. டெல்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்றம் மற்றும் சகேத் மாவட்ட நீதிமன்றம் உட்பட ஐந்து நீதிமன்ற வளாகங்களுக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, வளாகம் முழுவதும் தீவிரச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post