
ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை
செய்தி முன்னோட்டம்
இன்று காலை(ஜூலை 31), மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த RPF அதிகாரி ஒருவர், காவல் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த, ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் (12956) ரயிலில் இன்று காலை ஐந்து மணியளவில், RPF கான்ஸ்டபிள் சேத்தன் சிங் என்பவர், தனது துப்பாக்கியால் சுட்டதில், மற்றொரு RPF சக ஊழியரும், மூன்று பயணிகளும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ், மும்பையிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள பால்கர் ஸ்டேஷனைக் கடந்ததும் இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்றும், தொடர்ந்து ஆயுதங்களுடன் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு
#BREAKING | ஓடும் ரயிலில் பாதுகாப்பு காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!#SunNews | #Mumbai | #WesternRailway pic.twitter.com/eEamT6PlNp
— Sun News (@sunnewstamil) July 31, 2023