ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி, 10 பேர் மாயம்
இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் முசாபர் சர்கார் தெரிவித்தார். மாநில பேரிடர் மீட்புப் படை(SDRF) மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், படகில் பல பாடசாலை மாணவர்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. படகு கவிழ்ந்தபோது அதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். விபத்துக்குள்ளான 10 பயணிகள் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.