பொதுமக்கள் கவனத்திற்கு..வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் இந்த தேதியில் நடைபெறுகிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரியிலிருந்து 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி முன்னெடுக்கப்படும். தேவையான அளவிலான படிவங்களை வைத்திருப்பது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.