ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 விமானப்படை வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்தனர். கடந்த ஆண்டு ராணுவத்தின் மீது தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்ட இப்பிராந்தியத்தில் இந்த ஆண்டு ஆயுதப் படைகள் மீதான முதல் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலில் இதுவரை பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. அப்பகுதிக்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப்படை வாகனங்கள் கான்வாய் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு அப்பகுதியில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது." என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.