
நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு,நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் தற்காலிக உதவியாளராக வேலை செய்பவர் மோகன்ராஜ்(வயது 50).
இவர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை எதுக்கும் செல்லாமல் அங்கேயே சுற்றிச்சுற்றி வந்துள்ளார்.
தொடர்ந்து இவர் பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் இணைந்து அவர் சொல்லும் வேலைகளையும் செய்து கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18ம்தேதி சமூக வலைத்தளங்களில் மோகன்ராஜ் பேசிய வீடியோ ஒன்று வெளியானது.
அதில் கூறியுள்ளதாவது, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் வயது முதிர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் உள்ளவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோள்படி, விஷ ஊசிப்போட்டு கொன்றுள்ளேன்.
இதற்காக ரூ.5,000 கட்டணம் வசூலிப்பேன். இதுவரை 300க்கும் மேற்பட்டோரை விஷ ஊசிப்போட்டு கொன்றுள்ளேன்.
10 ஆண்டுகளாக இந்த செயலினை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
காவல்
முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது
இதையறிந்து பள்ளிப்பாளையம் காவல்துறையினர், மோகன்ராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இது குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் கூறுகையில், சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ அடிப்படையில் விசாரணையினை நடத்தினோம்.
அதற்கு அவர் போதையில் உளறி விட்டதாக கூறுகிறார்.
ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, இது போன்ற விஷயங்களை யாரும் வெளிப்படையாக செய்யவும் மாட்டார்கள், புகாரளிக்கவும் முன்வர மாட்டார்கள்.
இதுப்போல் காரியங்களை செய்ய மோகன்ராஜ் போன்றோரும், போலி டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மேலும் அவருக்கு விஷமருந்து எவ்வாறு கிடைத்தது என்ற விவரங்களுடன், முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே இதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.