Page Loader
'3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம் 
'3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம்

'3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம் 

எழுதியவர் Nivetha P
Dec 15, 2023
12:27 pm

செய்தி முன்னோட்டம்

ஆவினுக்கு 3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் ஆண்டுதோறும் சீரான விலை பாலுக்கு வழங்குவதால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு வழங்கி வருவதாகவும் ஆவின் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்த நிறுவனம் ஓர் செய்தி குறிப்பினையும் வெளியிட்டுள்ளது. அதில், உற்பத்தி செலவு மற்றும் இடுபொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையினை மனதில் கொண்டு பால் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 லிட்டர் பால் கொள்முதலுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3 வீதம் வரும் 18ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆவின் 

இதர சத்துக்களை கணக்கீடு செய்ய ஐஎஸ்ஐ முறையினை பயன்படுத்த நடவடிக்கை 

மேலும், 4.3 சதவிகிதம் கொழுப்பு சத்து மற்றும் மற்ற சத்துக்கள் 8.2 சதவிகிதத்திற்கு மேல் அதிகம் கொண்டுள்ள பால் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக லிட்டருக்கு ரூ.1 வழங்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையினை ஏற்று பாலில் உள்ள இதர சத்துக்களை கணக்கீடு செய்ய ஐஎஸ்ஐ முறையினை பயன்படுத்தி அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு தேவையான தாது உப்பு கலவை, பசுந்தீவனம் உற்பத்தி செய்ய தேவையான விதைகள், கால்நடை தீவனம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.