Page Loader
மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Jul 01, 2023
09:31 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில், யவத்மாலில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்ததால் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) அதிகாலை 2 மணியளவில் நடந்தது. இதுகுறித்து பேசிய புல்தானா போலீஸ் துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி, "பேருந்தில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்திருக்கின்றனர். அதில், 6-8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆகவே, தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

ஹப்க

உயிரிழந்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

"பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்தனர், அதில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயம் அடைந்தனர். பேருந்தின் ஓட்டுநர் உயிர் பிழைத்துள்ளார். மேலும், பேருந்தின் டயர் வெடித்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது." என்று புல்தானா எஸ்பி சுனில் கடசனே கூறியுள்ளார். புல்தானா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.