LOADING...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ரூ. 1300 கோடி செலவில் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பு
கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ரூ. 1300 கோடி செலவில் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2025
02:33 pm

செய்தி முன்னோட்டம்

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் கொடியேற்றம் வரும் நவம்பர் 24 அன்று நடைபெறும், தொடர்ந்து நவம்பர் 30 தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகாதீபம் டிசம்பர் 3 நடக்கிறது. பின்னர் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை தெப்பல் திருவிழா நடக்கும். இதற்கிடையே டிசம்பர் 4 மாலை 7.58 முதல் டிசம்பர் 5 காலை 5.37 வரை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும்.

போக்குவரத்து

பிரம்மாண்டப் போக்குவரத்து ஏற்பாடுகள்

பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையைச் சமாளிக்க, மொத்தம் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் (11 பிரதான நிலையங்கள், 13 மாற்று நிலையங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2,325 பேருந்துகள் வரை நிறுத்த முடியும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து மொத்தம் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன (11,293 நடைகள்). மேலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து சுமார் 520 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதைக்கு இடையே பக்தர்களை அழைத்துச் செல்ல 310 ஷட்டில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.