Page Loader
ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள்
ஸ்மார்ட் சிட்டியாக மாறும் தமிழகத்தை சேர்ந்த 7 நகரங்கள்

ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள்

எழுதியவர் Sindhuja SM
Mar 13, 2023
11:06 am

செய்தி முன்னோட்டம்

இந்திய அரசின் தேசிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த 22 நகரங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 78 நகரங்கள், அடுத்து 4 மாதங்களுக்குள் அனைத்து திட்டங்களையும் முடித்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களில் நடந்துவரும் முக்கிய திட்டங்களை முடிக்க அதீத முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இந்தியா

ஸ்மார்ட் சிட்டியாக மாறும் தமிழகத்தை சேர்ந்த 7 நகரங்கள்

தேசிய ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் ஜூன் 2015 இல் தொடங்கப்பட்டது. இதன் கீழ் 2016 மற்றும் 2018 க்கு இடையில் நான்கு நிலை போட்டிகள் மூலம் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆக்ரா, அகமதாபாத், அமராவதி, போபால், புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, இந்தூர், காக்கிநாடா, மதுரை, பிம்ப்ரி-சின்ச்வாட், புனே, ராஞ்சி, சேலம், சூரத், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, உதய்பூர், வாரணாசி, வேலூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்கும் முதல் 22 ஸ்மார்ட் நகரங்கள் ஆகும். இந்த திட்டத்திற்கு கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மீதமுள்ள 78 நகரங்கள் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.