NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன
    சபர்மதி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து

    மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    வாரணாசியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது.

    இதில் 22 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் எஞ்சின் தண்டவாளத்தில் இருந்த பொருள் ஒன்றின் மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    எனினும், இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று கான்பூர் நகர உதவி ஆட்சியர் ராகேஷ் வர்மா கூறியுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

    மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தண்டவாளத்தில் இருந்த ஒரு பொருளின் மீது இயந்திரம் மோதியதால் ரயில் தடம் புரண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    உளவுத்துறை விசாரணை

    உள்நாட்டு உளவுத்துறை ஐபி விசாரணை

    இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் உள்நாட்டு உளவுத்துறையான ஐபி மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்ஜினின் முன் பகுதியில் ஒரு பாறாங்கல் போன்ற பொருள் மோதியதால், குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டு தடம் புரண்டதாக லோகோ பைலட் தெரிவித்தார்.

    ரயில் தடம் புரண்டதன் எதிரொலியாக, சிக்கித் தவிக்கும் பயணிகளை கான்பூருக்கு ஏற்றிச் செல்ல இந்திய ரயில்வே பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அங்கிருந்து அகமதாபாத் நோக்கி பயணம் தொடரும்.

    விபத்து நடந்த இடத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கான்பூர்-ஜான்சி வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்களும் திருப்பி விடப்பட்டுள்ளதாக வட மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ சஷி காந்த் திரிபாதி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    இந்தியா
    விபத்து

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ரயில்கள்

    அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே  இந்தியா
    சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே  தெற்கு ரயில்வே
    ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை ஜப்பான்
    முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வேறு நபரின் பெயருக்கு மாற்றும் வசதி சேலம்

    இந்தியா

    இந்தியாவின் 2025 ஹஜ் கொள்கை: ஒதுக்கீட்டில் மாற்றங்கள், முதியோருக்கான முன்னுரிமை ஹஜ்
    ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஆர்பிஐ
    அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன பங்களாதேஷ்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு ரிசர்வ் வங்கி

    விபத்து

    குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி ஹரியானா
    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி, 10 பேர் மாயம் ஜம்மு காஷ்மீர்
    ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர் ஹைதராபாத்
    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம் சத்தீஸ்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025