15 மாவட்டங்களில் 20,000 வாரிய வீடுகள் விற்பனைக்கு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 62 திட்டங்களில் உள்ள வீடுகளை பெற விரும்புவோர் இப்போது 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம். ஒரு இடத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்ற சூழலில், அங்கு குடிசைகளை அகற்றி, குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன. இதன்மூலம், அங்கு உள்ள 500 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு மேலாக, அதிக வீடுகள் தகுதியான நபர்களுக்கு விற்பனைக்கு உள்ளது.
விற்பனைக்குள்ள வீடுகள் பற்றிய விவரங்கள்
விற்பனைக்கு உள்ள வீடுகள் குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணையதளத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 62 இடங்களில் கட்டப்பட்ட 20,000 வீடுகள் தற்போது விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த வீடுகள் 4 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. வீடுகள் பெற விரும்பும் மக்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் www.tnuhdb.org.in/ என்ற இணையதளத்தில் 'வீடு வேண்டி விண்ணப்பம்' என்ற பகுதியில் விண்ணப்பிக்கலாம்.