Page Loader
உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்
சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்

உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2023
03:53 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கொடூர சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பணத்தை திருடியதாக கூறி இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டதோடு, சிறுவர்களுக்கு அடையாளம் தெரியாத சில ஊசிகளையும் வலுக்கட்டாயமாக செலுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 4 ஆம் தேதி சித்தார்த்நகர் மாவட்டத்தின் பத்ரா பஜார் காவல் நிலையப் பகுதியின் கொங்கட்டி சௌராஹாவுக்கு அருகிலுள்ள அர்ஷன் சிக்கன் என்ற கடையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்த சில காணொளிகளும் வெளியாகி வைரலானது.

polices arrested 6 involved

ஆறு பேரை கைது செய்தது உத்தரபிரதேச காவல்துறை

சம்பவம் தொடர்பாக வெளியான ஒரு காணொளியில். சிறுவர்கள் மிளகாயை சாப்பிட்டு, பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை விழுங்குவதைக் காட்டியது. மேலும் அங்கிருந்த ஒரு கும்பல் அதைச் செய்யவில்லை என்றால் அடித்து விடுவோம் என்று மிரட்டுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான மற்றொரு காணொளியில், சிறுவர்கள் தரையில் முகம் குப்புறக் கிடப்பதைக் காட்டுகிறது. அதில் அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, கால்சட்டை கீழே இழுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு நபர் அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் தேய்ப்பதும், வலியால் அலறிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு மஞ்சள் நிற திரவம் ஊசி மூலம் செலுத்தப்படும் பதிவாகியுள்ளது. காணொளி வைரலாக பரவிய நிலையில், துரிதமாக செயல்பட்ட சித்தார்த்நகர் காவல்துறை, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளது.