LOADING...
தமிழகத்தில் 2 லட்சம் பேர் தபால் வாக்கு பதிவு; 95 சதவீத பூத் சிலீப்கள் விநியோகம் செய்து நிறைவு!
தமிழகத்தில் 2 லட்சம் பேர் தபால் வாக்கு பதிவு செலுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 2 லட்சம் பேர் தபால் வாக்கு பதிவு; 95 சதவீத பூத் சிலீப்கள் விநியோகம் செய்து நிறைவு!

எழுதியவர் Vasuki
Apr 20, 2026
08:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், மாநிலம் முழுவதும் இதுவரை 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பறக்கும் படை 

பணம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.1,200 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியான பறிமுதலில் திருவள்ளூர் மாவட்டம் ரூ.85 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

தபால் வாக்குகள்

பூத் சிலீப் விநியோகம்

இதுவரை சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 95 சதவீத பூத் சிலீப்கள் (Booth Slips) வாக்காளர்களுக்கு வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. தேர்தலை அமைதியாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள். தேர்தலைப் பாதுகாப்பாக நடத்த 300 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் நேரடித் தணிக்கையில் இருக்கும்.

Advertisement

பதற்றமான வாக்குச்சாவடிகள்:

தேர்தல் ஆணையத்தின் உறுதி

தமிழகம் முழுவதும் 5,938 வாக்குச்சாவடிகள் 'பதற்றமானவை' எனக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் துணை ராணுவப் படைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு போன்ற சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் சிறப்புப் பார்வையாளர்கள் தொகுதி வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் எந்தவித முறைகேடுகளும் இன்றி, அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன" என்று பிரதாப் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Advertisement