LOADING...
சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல்
சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் pc: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2024
05:42 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக தன்னை சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளித்த மத்திய அரசு, சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், நீதிமன்றம் வழங்கிய ஆவணத்தை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளோம் என்றும் கூறியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

விரைவில் சாந்தன் இலங்கை செல்ல அனுமதி