LOADING...
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுப்பு 
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் பேட்டி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுப்பு 

எழுதியவர் Sindhuja SM
Oct 08, 2023
01:04 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரி, புதுச்சேரி சட்டமன்றத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய உள்துறை அமைச்சாகம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுப்பு தெரிவித்ததுடன், புதுச்சேரி ஒரு யூனியன் பிரேதேசமாகவே தொடரும் என்று கூறியுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்திருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், "மீண்டும் சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். மத்திய அரசு அப்போதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அனைத்து எம்எல்ஏக்களும் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது"