NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது 
    சம்பவம் நடந்த போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை

    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 19, 2023
    06:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes-ன் க்ரைம் ஸ்டோரி: மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய(BARC) குடியிருப்பில் தங்கி இருந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை BARCயில் பணி புரிவதால், அந்த ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் பாதிக்கப்பட்ட மாணவி தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.

    அதே குடியிருப்பில் வசிக்கும் அஜித்குமார் யாதவ்(26) என்பவர் கடந்த புதன்கிழமை மாலை தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு, தனக்கு இண்டக்ஷன் அடுப்பு தேவைப்படுவதாக கூறி இருக்கிறார்.

    அஜித்குமாரின் உண்மை முகத்தை அறியாத அந்த மாணவியும் அடுப்பை கொடுப்பதற்காக பக்கத்து வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

    டிஜிவ்ன்

    வீட்டில் யாரும் இல்லாத போது பாக்கத்துவீட்டுக்கு சென்ற மாணவிக்கு நடந்த அவலம்

    அந்த மாணவி பக்கத்து வீட்டுக்கு சென்ற போது, அங்கு அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் பிரபாகர் யாதவ்(30) வீட்டில் இருந்திருக்கின்றனர்.

    அஜித் குமாரோடு வசிக்கும் அவரது தந்தையும் தாயும் அன்று வீட்டில் இல்லை.

    முதலில், அந்த மாணவியிடம் நட்புறவோடு பேசிய அந்த நண்பர்கள் இருவரும், பின்பு அந்த பெண்ணுக்கே தெரியாமல் அவர் குடிக்கும் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்தனர்.

    இதனையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்த மாணவி சுயநினைவை இழந்தார்.

    அதன்பிறகு, அன்று இரவு முழுவதும் நண்பர்கள் இருவரும் மாறி மாறி அந்த இளம்பெண்ணை பாலத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு அடுத்த நாள் நினைவு தெளிந்து விழித்த அந்த மாணவி, உடனடியாக தன் நண்பர்களின் உதவியோடு காவல்துறையை அணுகினார்.

    பிஜியூ

    போலீஸார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், 376(பலாத்காரம்), 376 (டி)(கும்பல் பலாத்காரம்) உள்ளிட்ட பல்வேறு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ், கோவண்டி பகுதியில் வசிக்கும் 26 வயது அஜித்குமார் யாதவ் மற்றும் அவரது 30 வயது நண்பர் பிரபாகர் யாதவ் மீது FIR பதிவு செய்யப்பட்டது.

    மேலும், அஜித்குமார் யாதவின் வீட்டை சோதனை செய்த போலீஸார் அவரது வீட்டில் இருந்த மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

    அது போக,குற்றம்சாட்டப்பட்ட அஜித்குமார் யாதவ் மற்றும் அவரது நண்பர் பிரபாகர் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போலீஸார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    மும்பை
    மகாராஷ்டிரா
    இந்தியா

    சமீபத்திய

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    மும்பை

    மும்பை சிட்டி எஃப்சியில் மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு கால்பந்து
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது  விமானம்
    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா

    மகாராஷ்டிரா

    மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்  இந்தியா
    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்  மும்பை
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா

    இந்தியா

    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார் ஹோட்டல்
    சில்லறை பணவீக்கம் 5 மாதம் இல்லாத அளவு சரிந்தது  ரிசர்வ் வங்கி
    தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025