கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி
ஆந்திரா மாநிலத்திலிருந்து டாட்டா சுமோ காரில் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் 4 பெண்கள், 3 வயது குழந்தை உள்ளிட்ட மொத்தம் 14 பேர் பயணம் செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, இந்த கார் கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டத்தில் பாகெப்பள்ளி என்னும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது. அதேநேரம் நாகாலாந்து மாநிலத்திலிருந்து, சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்திருந்த லாரி அப்பகுதியில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்நேரம் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் அதிவேகமாக வந்த டாட்டா சுமோ நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கடுமையாக மோதியுள்ளது.
தசரா பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புகையில் நேர்ந்த சோகம்
இதில் காரில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கியுள்ளனர். இதற்கிடையே, காரில் பயணித்த அனைவரும் பெங்களூர் ஒங்கசந்திரம் பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும், தசரா பண்டிகையை கொண்டாடிவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்புகையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.